அதிமுக, பாஜக கூட்டணியால் தேர்தல் பயத்தில் ஸ்டாலின்.! இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்

Published : May 04, 2025, 03:24 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளனர்.

PREV
14
அதிமுக, பாஜக கூட்டணியால் தேர்தல் பயத்தில் ஸ்டாலின்.! இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்லுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக- பாஜக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதனை விமர்சித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல் வரும். இதனால் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளார் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

24
சட்டம் ஒழுங்கு சரியில்லை

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஈரோட்டில் முதியவர்கள் கொலை சம்பவம் மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஆகியோர் கொலைகளுக்கான குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகின்றது என தெரிவித்தார். 
 

34
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மட்டுமே சிந்தனை

ஆனால் இதில் கவனம் செலுத்ததாக செலுத்தாத முதலமைச்சரின் கவனம் அக்கரை எல்லாம் பாஜக, அதிமுக கூட்டணியிலையே இருந்து வருகின்றது. கன்னியாகுமரி,நெல்லை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தண்ணீர் தட்டுபாடு உள்ளது.  

ஆனால் அதனை பற்றி முதல்வருக்கு அக்கறை இல்லை அவருக்கான ஒரே சிந்தனை எங்களது அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மட்டுமே என தெரிவித்தார்.  சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்துள்ளது எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

44
அதிமுக - பாஜக கூட்டணியானது Pleasure

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை,  தமிழகத்தில்  "போராட்டங்கள் ஒருபக்கம் நடக்கிறது, ஆனால் முதலமைச்சரோ தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார். Pressure கொடுத்து கூட்டணி வைத்ததாக சொல்கிறார்கள், ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியானது Pleasure" என்று தெரிவித்தார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories