Published : May 04, 2025, 02:31 PM ISTUpdated : May 04, 2025, 02:33 PM IST
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதிமுக அதை மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை தவிர மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது திமுக, இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடர்ந்த நிலையில், அதிமுக கூட்டணியானது பிளவு பட்டது. இதன் காரணமாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் மட்டும் இடம் பிடித்தது. அதே நேரம் பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரும் இடம்பிடித்து இருந்தனர்.
25
அதிமுகவோடு தேமுதிக
இந்த தேர்தல் நேரத்தில் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுக்க அதிமுக மற்றும் பாஜக தீவிரமாக முயன்றது. இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனிடையே தமிழகத்தில் விரைவில் மாநிலங்களவை பதவி காலியாகவுள்ளது. இதில் திமுக, அதிமுக சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். எனவே தேமுதிகவிற்கு மாநிலங்களவை பதவியை அதிமுக தருவதாக கூறியதாகவும் தேர்தல் நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
35
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்
ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார். ராஜ்யசபா பதவி தொடர்பாக எந்தவித உறுதியும் அளிக்கவில்லையென தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுக தலைமை மீது தேமுதிக கடும் அதிருப்தியில் உள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா.? இல்லையா என எந்தவித உறுதியும் அளிக்கவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தங்கள் கட்சிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளித்ததாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொருளாளர் சுதீஷ் செய்தியாளர்களிடப் கூறுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டபோது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்ததனால் கூட்டணியில் அங்கம் வகித்தோம் . அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு.
55
அதிமுக மீது அதிருப்தியில் தேமுதிக
எனவே சரியான வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெறுவதற்கான தகுதியும் தேமுதிகவுக்கு உள்ளது என தெரிவித்தார். மேலும் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ள என்றும் அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் அறிவிப்பார் என தெரிவித்தார்.