நாகை-இலங்கை இடையேயான கப்பல் சேவை மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மார்ச் 1 முதல் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இலங்கைக்கு செல்ல காத்திருந்த சுற்றுலா பயணிகள்.! திடீர் ரத்து செய்யப்பட்ட பயணம்
காடு, மலைகள், பாலைவனம் என பல இடங்களில் சுற்றுலா சென்ற பயணிகள் அடுத்ததாக கடலில் பயணம் செய்ய விரும்புவார்கள். அந்த வகையில் நாகையில் இருந்து இலங்கைக்கு ரொம்ப ரொம்ப குறைந்த கட்டணத்தில் கப்பல் பயணம் இயக்கப்பட்டால் கேட்கவா வேண்டும். அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும். அதன் படி நாகையில் இருந்து இலங்கைக்கு 2023ஆம் ஆண்டு கப்பல் பயணம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சேவை உரிய முறையில் இயக்கப்படவில்லை.
24
Nagai To Srilanka
இதனால் கப்பல் பயணம் செய்து இலங்கை மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். எனவே கப்பல் பயணத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலை நீடித்தது. இதனால் சில மாதங்களுக்கு பிறகு "சிவகங்கை" என்ற பெயர் கொண்ட கப்பல் போக்குவரத்து நாகை துறைமுகத்தில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.
இந்ந கப்பல் சேவையானது சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் பயணிகளின் நம்பிக்கையையும் பெற்றது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் காரணமாக அடுத்தடுத்து புயல், மழை போன்ற இயற்கை பேரிடர் காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
34
Nagai ship
இதனையடுத்து 3 மாத காலத்திற்கு பிறகு கடந்த 22,ம் தேதி முதல் மீண்டும் இந்தியா-இலங்கை இடையிலான, கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இதனிடையே தெற்கு கேரளா அதைஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மழைக்கான வாய்ப்பும் அதே போல் மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரி கடல் பகுதியில், மணிக்கு 45 கிலோமீட்டரில் இருந்து, 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
44
Nagai Sri Lanka ferry
மேலும் ராமநாதபுரம், நாகை போன்ற மாவட்டங்களில் கடல் சீற்றமும் கன மழையும் பெய்தது. இதனால் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நாகையிலிருந்து, இலங்கைக்கு புறப்படும் கப்பல் சேவை ரத்து செய்யப்படுவதாக கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
மீண்டும் கப்பல் சேவையானது மார்ச் 1,ம் தேதி முதல் வழக்கம்போல் நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை, காங்கேசன்துறைக்கு, கப்பல் போக்குவரத்து சேவையானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு கப்பல் சேவை ரத்து செய்யப்படுவதால், கப்பலில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த, இந்திய இலங்கை, இருநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் அங்கு ஏமாற்றமடைந்துள்ளனர்.