விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பா.? அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் 45 கட்சிகள் எது.?

Published : Feb 26, 2025, 10:34 AM IST

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் உரிமைகள் தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பா.? அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் 45 கட்சிகள் எது.?
விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பா.? அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் 45 கட்சிகள் எது.?

தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய். 2026ஆம் ஆண்டில் திமுகவை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதே தவெகவின் லட்சியமாக உள்ளது. அந்த வகையில்  திமுகவிற்கு இணையாக அடிமட்டம் வரை நிர்வாகிகளை விஜய் அடுத்தடுத்து நியமித்து வருகிறார். தற்போது இரண்டாம் ஆண்டு விழாவையும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

25
PM ModI MK Stalin

அந்த வகையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெற  முடியாத நிலை ஏற்படவுள்ளதாக தெரிவித்தார். எனவே இது தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டமானது வருகிற மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். 

35
dmk alliance and admk

எனவே இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்தார். அதன் படி நடிகர் விஜய்யின் தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 45 கட்சிகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி, அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் பட்டியல் வெளியான நிலையில் நேரில் அழைக்க அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தகவல். இன்று முதல் அரசியல் கட்சி தலைவர்களை அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

45
ALL PARTTY MEETING

அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைக்கப்படவிருக்கும் கட்சிகள் பட்டியல்-

1.திராவிட முன்னேற்றக் கழகம், 2.இந்திய தேசிய காங்கிரஸ், 3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 7.விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8.மனிதநேய மக்கள் கட்சி, 9.அகில இந்திய பார்வர்டு பிளாக், 10.தமிழக வாழ்வுரிமை கட்சி

11.மக்கள் நீதி மையம், 12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, 13.ஆதி தமிழர் பேரவை, 14.முக்குலத்தோர் புலிப்படை, 15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம், 16.மக்கள் விடுதலை கட்சி, 17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 18.பாட்டாளி மக்கள் கட்சி, 19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), 20.தேசிய முற்போக்கு திராவிட கழகம், 21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், 22.பாரதிய ஜனதா கட்சி
 

55
Chief Minister Stalin invited 45 political party

23.தமிழக வெற்றிக் கழகம், 24.நாம் தமிழர் கட்சி, 25.புதிய தமிழகம், 26.புரட்சி பாரதம் கட்சி, 27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், 28.புதிய நீதிக் கட்சி, 29.இந்திய ஜனநாயகக் கட்சி,  30.மனிதநேய ஜனநாயகக் கட்சி, 31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, 32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், 33.பெருந்தலைவர் மக்கள் கட்சி,

34.அனைத்து  இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், 35.பசும்பொன் தேசிய கழகம், 36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், 37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, 38.கலப்பை மக்கள் இயக்கம், 39.பகுஜன் சமாஜ் கட்சி, 40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, 41.ஆம் ஆத்மி கட்சி, 42.சமதா கட்சி, 43.தமிழ்ப்புலிகள் கட்சி, 44.கொங்கு இளைஞர் பேரவை, 45.இந்திய குடியரசு கட்சி

click me!

Recommended Stories