பள்ளி மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை.! சூப்பர் அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Nov 28, 2024, 10:18 AM IST

Student Scholarship : தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. .

PREV
14
பள்ளி மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை.! சூப்பர் அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
School Student

பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் புதிய, புதிய திட்டங்களையும் மாணவர்களின் நன்மைக்காக அறிமுகப்படுத்துகிறது. அதன் படி,  அரசுப் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்ளுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு" 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

24
school student

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் அதாவது 500மாணவர்கள் மறுறம்  500 மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு ரூ.1000/- என) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

34
School Student

தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10.00மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரையிலும் நடைபெறும்.

44
School Student- cash

மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 09.12.2024 க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories