மாணவர்களின் திறமையை வளர்க்கும் போட்டிகள்
தமிழக அரசு மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மாணவர்களின் பொது அறிவு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன் படி தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக இனைய மாணவர்கள் மொபைல் போனில் அடிமையாகி உள்ளனர்.
பல ஆன்லைன் விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்டு படிக்க முடியாமல் கவனம் சிதறி வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தீய விளைவுகள் தொடர்பாக மாணவர்களிடம் பரிசு போட்டியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
ஆன்லைன் விளையாட்டு தீமைகள்
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கட்டுரைப் போட்டி நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுரை போட்டிக்கான தலைப்பு
மாணவர்கள் மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளை விட VIRTUAL ஆன்லைன் விளையட்டுகளுக்கு ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்? இளைஞர்கள் மீதான இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்கள் என்ன? இணையவழி விளையாட்டுக்கும், மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளுக்குமான உங்களின் பரிந்துரைகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் கட்டுரை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
school student
மாணவர்களுக்கான பரிசு
இந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழிக்கு தனித்தனியாக பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
1. முதல் பரிசு- 10,000 ரூபாய்
2. இரண்டாம் பரிசு- 6.000 ரூபாய்
3. மூன்றாம் பரிசு- 4,000 ரூபாய்
4. ஆறுதல் பரிசு 6 மாணவர்களுக்கு - தலா1000 ரூபாய்
போட்டிக்கான கால அட்டவணை
02.12.2024
பள்ளி அளவில் போட்டிகளை நடத்தி தமிழ் வழியில்-2 மற்றும் ஆங்கில வழியில்-2 மாணாக்கர்களின் பெயர் பட்டியலை சார்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
05.12.2024
வட்டார அளவில் போட்டிகளை நடத்தி தமிழ் வழியில்-2 மற்றும் ஆங்கில வழியில்-2 மாணாக்கர்களின் பெயர் பட்டியலை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் (Educational District) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
09.12.2024
கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி ஒரு கல்வி மாவட்டத்திற்கு தமிழ் வழியில்-2 மற்றும் ஆங்கில வழியில்-2 மாணாக்கர்களின் பெயர் பட்டியலை சார்ந்த முதன்மைக்கல்வி சமர்ப்பிக்கப்பட வேண்டும். அலுவலகத்தில்
10.12.2024
சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
12.12.2024
பள்ளி கல்வி இயக்குநரிடமிருந்து பள்ளிக்கல்வி இணையவழி விளையாட்டு ஆணைய அலுவலருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களின் பெயர் பட்டியலை அனுப்ப வேண்டிய கடைசி நாள்.