ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன ஆச்சு? இன்று மருத்துவமனைக்கு விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்?

Published : Nov 28, 2024, 12:27 AM IST

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

PREV
14
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன ஆச்சு? இன்று மருத்துவமனைக்கு விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்?
EVKS Elangovan

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று  தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார்

24
EVKS Elangovan admitted in hospital

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

34
CM Stalin

அவருக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சையளிக்கப்படுகிறது.  தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

44
EVKS Elangovan News

ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories