ஒரே நாளில் 30ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

Published : Nov 28, 2024, 07:12 AM IST

Job Opportunities : தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 

PREV
16
ஒரே நாளில் 30ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
job opportunities

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து பல லட்சம் இளைஞர்கள் வேலையை தேடி பல இடங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் அரசு பணியில் இணைய வேண்டும் என ஆர்வம் உள்ள இளைஞர்கள் அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்து வருகின்றனர். அதன் படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

26
JOB

தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மேலும் அனைவருக்கும் அரசு பணியில் வேலை வழங்க முடியாத சூழலில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணிபுரிய பல ஆயிரம் இளைஞர்கள் தேவைப்படும் சூழல் உள்ளது. இதன் கருத்தில் கொண்டு தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன் படி, . 

36
JOB FAIR

வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும்  நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, வேலூர் மாவட்டத்தில் 30,11,2024 சனிக்கிழமை அன்று காலை 8,00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி, தரணம்பேட்டை, குடியாத்தம் வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

46
JOB

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்

20,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்,

அனுமதி இலவசம்

தொடர்புக்கு

உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ឈប់ 10.

0416 2290042 / 94990 55896

56
PRIVATE JOB

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு

இதே போல மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 30,11,2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3.00 மணி வரை சேஷசாயி தொழில் நுட்பப் பயிலகம் (SIT), அரியமங்கலம், திருச்சி -10 வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

66
job fair

சிறப்பு அம்சங்கள்

150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்.

10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்,

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பதிவு.

அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவு.

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்.


கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்,

தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புக்கு

துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சிராப்பள்ளி

அனுமதி இலவசம்

Read more Photos on
click me!

Recommended Stories