மாதம் 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.! குழந்தைகளுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு- சூப்பர் அறிவிப்பு

Published : Jul 31, 2025, 08:16 AM IST

தமிழக அரசு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் "அன்பு கரங்கள்" திட்டத்தை அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்த, கைவிடப்பட்ட, மற்றும் ஆதரவு தேவைப்படும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

PREV
14
தமிழக அரசின் நிதி உதவி திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு நிதி உதவி திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, கல்லூரியில் உயர்கல்வி பயிலும் பெண் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது, மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும் பல நிதி உதவி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

24
தாயுமானவரின் "அன்பு கரங்கள்" திட்டம்

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் தாயுமானவரின் "அன்பு கரங்கள்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதிகள் என்ன.?

திட்டத்தில் பங்கு பெற ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்/பெற்றோர் இருவரால் கைவிடப்பட்டவர்கள்).

ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து / பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)

கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிடப்பட்டுச் சென்று இருப்பின்).

ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து / பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)

34
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2ஆயிரம் ரூபாய்

ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து/ பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால்). என 18 வயது வரையிலானவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 2000 வழங்கப்படும்.

தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் (DBT - Direct Benefit Transfer) செலுத்தப்படுகிறது.

இந்த உதவித்தொகை 18 வயது நிறைவடையும் வரை அல்லது கல்வி முடியும் வரை வழங்கப்படுகிறது.

44
திட்டத்தில் பயன்கள்
  • கல்வி செலவுகளை ஈடு செய்ய உதவுதல் (புத்தகங்கள், சீருடை, கட்டணங்கள்).
  • குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு ஆதரவு.
  • குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருந்து மீள்வதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இந்த திட்டத்தில் பங்குபெற தகுதியுள்ளவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories