காங்கிரஸின் இளம் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஜனவரி 28ம் தேதி அல்லது ஜனவரி 29ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தான் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார். ஏற்கெனவே பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.