உள்துறை அமைச்சரே.. உங்க பேரு அமித் ஷாவா..? அவதூறு ஷாவா..? மத்திய அரசுக்கு எதிராக கர்ஜித்த ஸ்டாலின்

Published : Jan 07, 2026, 12:52 PM ISTUpdated : Jan 07, 2026, 02:18 PM IST

அரசுமுறைப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்தில் புதிதாக 8 நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

PREV
14
திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலின்

அரசுமுறைப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்தில் 8 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “நகரங்கள் மட்டுமல்லாது கிராமப் புறங்களும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. மக்களின் முக மலர்ச்சியைக் காண ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியை விட, திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 லட்சம் மெட்ரின் டன் அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

24
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலன்..

கடந்த 2019ம் ஆண்டிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தினை பழனிசாமி நிறுத்திவிட்டார். மேலும் ரூ.68 கோடி மதிப்புள்ள 55000 லேப்டாப்கள் வீணானதாக CAG தணிக்கை மூலம் தெரிய வந்தது. சந்தேகம் இருந்தால் அந்த அறிக்கையை அவர் பார்த்துக் கொள்ளட்டும். நம் விடியல் அரசில் ஏதாவது ஒரு திட்டத்தில் எப்படியாவது எல்லோருக்கும் பலன் கிடைக்கிறது.

34
தமிழகத்தில் பாஜகவின் நிழல் ஆட்சி

அண்மையில் தமிழ்நாடு வந்த அமித்ஷா 2026ல் தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா? வேண்டாமா என்று மக்களைப் பார்த்துக் கேட்டுள்ளார். அதிமுகவுக்கு வாக்களித்தால், பாஜக தான் ஆளும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றி. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கு தான் பழனிசாமி பாடுபடுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜகவின் Proxy ஆட்சி நடைபெற்றது. அதில் இருந்து மீண்டு கடந்த 4 ஆண்டுகளாக தலை நிமிர்ந்துள்ளது.

44
அமித்ஷாவா..? அவதூறு ஷாவா..?

நமது ஒன்றி உள்துறை அமைச்சரின் பெயர் அமித்ஷாவா, அவதூறு ஷாவா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பான செய்திகளை பேசியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு நம்பிக்கைகளுக்கு முடிவுகட்டும் வகையில் நமது தமிழகம் செயல்படுவதாக அமித்ஷா பேசியுள்ளார். இதற்காக நான் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். அவருக்கு தமிழகத்தில் என்ன நடைபெறுகிறதென்பதே தெரியவில்லை. சுமார் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளும் மாநிலங்களில் செய்ததுண்டா?

Read more Photos on
click me!

Recommended Stories