அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

Published : Feb 18, 2025, 08:13 AM IST

முதல்வர் ஸ்டாலினை இளைய தலைமுறை 'அப்பா' என அழைப்பது குறித்த சர்ச்சைக்கு சி.வி.சண்முகம் கடும் விமர்சனம். இதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
16
அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி
அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்கிற நிகழ்ச்சி மூலம் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இப்போது அப்பா என்று அழைக்கிறார்களே? என்கிற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், தலைவர் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்றார். 

26
சி.வி.சண்முகம்

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது 
யாரை அப்பா என்று சொல்வார்கள்? மானம்கெட்ட தனமாக இருக்கிறது. பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம். தாய்மார்கள் எல்லோரையும் அம்மா என்று அழைப்பது வழக்கம். அது கலாச்சாரம். யாருக்கு யார் அப்பா? இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள் என கடுமையாக விமர்சித்தார். இவரது அறுவறுக்கத்தக்க பேச்சுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

36
போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்

இதுதொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: ''மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்''  என நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம். 

46
அதிமுக

’’அம்மா... அம்மா..’’ என அமையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு ’’சின்னம்மா இல்ல...எங்க அம்மா’’ என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார். அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது. 

56
முதல்வர் ஸ்டாலின்

 மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து ’’நன்றி அப்பா’’ என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டார். 

66
சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துகிறது போல. அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல. அதனால்தான், அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories