தேர்தல் நெருங்கி வருவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டன.. அமைச்சர் மா.சு.பதிலால் தற்காலிக ஊழியர்கள் ஷாக்..

Published : Jan 29, 2026, 12:05 PM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்கி வருவதால் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களின் போராட்டங்கள் பேஷனாகி விட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
13
தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

23
மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

இந்த நிலையில் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், “மருத்துவப் பணியாளர்கள் சுமார் 6, 7 குழுக்களாக உள்ளனர். அவர்களுடன் முன்னதாகவே பேசிவிட்டோம்.

33
போராட்டங்கள் பேஷனாகிவிட்டன..

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் கடந்த 2013ம் ஆண்டு தற்காலிகப் பணியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர். 2013 முதல் 2021 வரை அவர்கள் எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை. அதாவது அவர்கள் அனைவரும் அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள். தற்போது தேர்தல் வரவுள்ளதால் ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது பேஷனாகி விட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories