பள்ளி மாணவன் இதயம் செயலிழக்கும் அளவுக்கு நடந்தது என்ன? உண்மையை போட்டுடைத்த டாக்டர்கள்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.

Published : Jan 29, 2026, 11:58 AM IST

11-ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் கடித்த விஷப்பூச்சியின் விஷம் இதயம் வரை பரவி, இதய செயலிழப்பு ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம்.

PREV
14

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் சந்தோஷ். நாகையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சந்தோஷ் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

24

இதையடுத்து பள்ளி மாணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டது மட்டுமல்லாமல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

34

இதுகுறித்து பள்ளி மாணவினின் தந்தை வீரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்: மாணவன் சந்தோஷுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பே விஷப்பூச்சி கடித்து இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. பூச்சியின் விஷம் இதயத்தின் சதைப் பகுதி வரை பரவியுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பூச்சியின் விஷம் இதயத்தின் சதைப் பகுதியில் பரவியதால் அது செயலிழந்து விட்டது.

44

இதனால் மாணவர் சந்தோசை காப்பாற்ற முடியவில்லை. உரிய நேரத்தில் சிகிச்சையில் சேர்த்து இருந்தால் மாணவரை காப்பாற்றி இருக்கலாம். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷப்பூச்சி கடித்த உடனேயே 3 பேர் சிகிச்சைக்காக வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் 3 பேரையும் காப்பாற்ற முடிந்தது என்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories