Aadhav Arjuna Vs DMK: ஸ்டாலின் குடும்பத்துக்கு இதுவே கடைசி.. கரூர் சம்பவத்தில் ஒருத்தரையும் விடமாட்டேன்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

Published : Jul 02, 2026, 03:36 PM IST

Aadhav Arjuna: முதலமைச்சர் விஜய்யை பிரசாரம் செய்யவிடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். செயற்கையான கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்த திமுக முயற்சி செய்தது. கரூர் மக்கள் கண்ணீரின் பாவம் தான் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார்.

PREV
14
தவெகவில் அதிமுகவினர்

அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் என 20,000க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். இந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

24
தவெக எம்எல்ஏவுக்கு ரூ.50 கோடி வரை பேரம்

ஆதவ் அர்ஜுனா இணைப்பு விழாவில் பேசுகையில்: விஜய் என்ற பெயர் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது; விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேருவதற்கு முன் ஒட்டுமொத்த அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் தவெகவில் இணைக்கப்பட வேண்டும் என எங்கள் தலைவர் அரசியல் வியூகம் வகுத்தார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 90% பேர் தவெகவிற்கு வருகின்றனர். தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். நாங்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவது உறுதி.

34
கரூர் மக்கள் கண்ணீர்

முதலமைச்சர் விஜய்யை பிரசாரம் செய்யவிடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். செயற்கையான கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்த திமுக முயற்சி செய்தது. கரூர் மக்கள் கண்ணீரின் பாவம் தான் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார். கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். இனி லண்டனுக்கு சென்று ஸ்டாலின் குடும்பம் செட்டில் ஆக வேண்டியது தான். ஒரு ரவுடி கட்டுப்பாட்டில் இருக்கும் கரூரை மீட்க வேண்டும்.

44
கரூர் சம்பவம் திமுகவின் சதி

கரூரில் தவெகவிற்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது. கரூரின் கணக்கு வழக்கை தவெக முடிக்காமல் விடாது. கரூர் சம்பவத்தின் அனைத்து உண்மைகளும் வெளிவரும். தேர்தலை பார்த்து தவெகவிற்கு ஒரு போதும் பயமில்லை. கரூர் சம்பவம் திட்டமிட்ட திமுகவின் சதி. காவல்துறையை வைத்து கரூர் கூட்ட நெரிசலை உருவாக்கியது என்று தெரிவித்தார். கூடிய விரைவில் திமுகவும் அதிமுகவும் இணைந்து பாஜக ஆதரவோடு ஒரு மோசமான அரசியல் சூழ்நிலையை உருவாக்க உள்ளார்கள். ஸ்டாலினும் ஈபிஎஸ்ஸும் அதை அறிவிக்கும் முன்பு, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories