DMK: கைதாகிறார் திமுக முன்னாள் அமைச்சர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

Published : Jul 01, 2026, 04:24 PM IST

Anitha Radhakrishnan: தவெக தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

PREV
14

ன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தவெக மற்றும் முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

24

அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

34

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அனிதா ராதாகிருஷ்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

44

இந்நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யும் நேரத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories