Published : Apr 21, 2025, 12:28 PM ISTUpdated : Apr 21, 2025, 12:31 PM IST
தமிழக அரசு, ஐடி நிறுவனங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், திருவண்ணாமலையில் புதிய மினி டைடல் பூங்காவை அமைக்கிறது. இந்த 4 தளங்கள் கொண்ட டைடல் பூங்கா, இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை வழங்கும்.
New IT Park in Tiruvannamalai! Tender announcement தொழில் துறையின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அசூர வளர்ச்சியை பெற்று வருகிறது. அந்த வகையில், கணினி காலம் மாறி ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப தொழில் துறையும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட டைடல் பார்க்கின் மூலம் இன்று பல லட்சம் இளைஞர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில்,
24
Tidal park in Tamilnadu
இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
ஐடி நிறுவனங்களை ஒரு இடத்தில் குவியாமல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மேம்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் மினி டைட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியிலும், திருச்சியிலும் பிரமாண்டமாக டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.
34
Tiruvannamalai tidal park
கரூர், திருவண்ணாமலை டைடல் பூங்கா
இதே போல கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற தொழிற்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார். இதற்காக 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் டைடல் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகளான திட்ட மேலாண்மை, வரைபடத் தயாரிப்பு என பணிகள் தொடங்கி நடைபெற்றது.
44
it jobs in tiruvannamala
திருவண்ணாமலை டைடல் பூங்கா- டெண்டர் கோரிய அரசு
இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக மினி டைடல் பூங்கா அமைக்க முக்கியமான கட்டமான கட்டடம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா இன்னும் ஓராண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் அமைக்கப்படவுள்ள டைடல் பூங்காவின் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.