பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது.! இல்லத்தரசிகளுக்கு குஷியோ குஷி

Published : Apr 24, 2025, 10:19 AM ISTUpdated : Apr 24, 2025, 10:28 AM IST

அத்தியாவசிய தேவையாக பால் உள்ளது. அந்த வகையில் பெரியவர்கள், சிறியவர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் சத்தான உணவு பொருளாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த பால் விலையானது இன்று லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. 

PREV
16
பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது.! இல்லத்தரசிகளுக்கு குஷியோ குஷி

Tamilnadu Milk price Drop : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியத்திற்காக பால் அருந்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 3 முறை பால் விலையானது உயர்ந்தது. தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் கடந்த மார்ச் 14ம் தேதி ஆரோக்யா பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாயும்,

தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாயும் தன்னிச்சையாக உயர்த்திய நிலையில் அந்நிறுவனத்தை பின்பற்றி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விற்பனை விலை உயர்வை உடனடியாக அமுல்படுத்தின.

26

அதிரடியாக உயர்ந்த பால் விலை

இருப்பினும் அந்நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் மட்டுமே உயர்த்தின. ஏற்கனவே கடந்தாண்டு (2024) டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும், நடப்பாண்டின் (2025) பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்திய அனைத்து தனியார் பால் நிறுவனங்களும்

அடுத்த ஒரு மாத இடைவெளியில் (மார்ச் மாதம் 14ம் தேதி முதல்) மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தியதால் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி சில்லறை வணிகர்கள், தேனீர் கடை, உணவகங்கள், இனிப்பகங்களின் உரிமையாளர்கள், கேன்டீன் நடத்துவோர் என பலதரப்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
 

36
Arokya Milk

குறைந்தது பால் விற்பனை

பால் விலை உயர்வு  காரணமாக விற்பனை விலையை உயர்த்திய முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனை சரிவடையத் தொடங்கிய நிலையில் வரலாறு காணாத வகையில் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனத்தின் பால் விற்பனையும் கடும் சரிவை சந்திக்கத் தொடங்கியது. இதனால்  குறைந்த பால் விற்பனை அளவை உயர்த்திடும் நோக்கத்திலும்  அதிகளவில் விற்பனையாகும் வணிக பயன்பாட்டிற்கான நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 4.00ரூபாய் குறைக்க முடிவு செய்து முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி லிட்டருக்கு 2.00ரூபாயும்,

46
Arokya Milk

பால் விலையை குறைத்த ஆரோக்கியா

இன்று (24.04.2025) முதல் லிட்டருக்கு 2.00ரூபாயும் என லிட்டருக்கு 4.00ரூபாய் விற்பனை விலை குறைப்பை அந்நிறுவனம் தற்போது அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆரோக்யா 500மிலி நிறைகொழுப்பு பால் பாக்கெட் 40.00ரூபாயில் இருந்து 38.00ரூபாயாகவும், 1லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட் 75.00ரூபாயில் இருந்து 71.00ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk) மற்றும் தயிர் விற்பனை விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

56
Curd and Milk price drop

தயிர் விலையையும் குறைக்கனும்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் பால் (நிறைகொழுப்பு மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால்), தயிர் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனம் தற்போது பால் விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது,

குறிப்பாக நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் தயிர் விற்பனை விலையையும் குறைக்க ஹட்சன் நிறுவனம் முன் வர வேண்டும், 

66

மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை குறைக்கனும்

அதுமட்டுமின்றி புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல ஹட்சன் நிறுவனத்தை பின்பற்றி கடந்த மார்ச் மாதம் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அதன் விற்பனை விலையை உடனடியாக குறைக்க முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு பால், தயிர் விற்பனை விலையை குறைக்க முன் வராத தனியார் பால் நிறுவனங்களுக்கு பொதுமக்களும், சில்லறை வணிகர்களும்  தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அனைத்து தனியார் பால் நிறுவனங்களுளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories