தமிழ்நாட்டில் 7300 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் மற்றும் ஊதிய உயர்வுக்காகப் போராடி வருகின்றனர். சீமான் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழக மானியக் குழு தீர்மானித்த ஊதியத்தை வழங்கவும், பணியை நிலைப்படுத்தவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Guest lecturers protest seeman support : தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7300க்கும் மேலான கௌர விரிவுரையாளர்கள் பணி நியமனம், ஊதிய உயர்வு தொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் மிகவும் இழிவான நிலையிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். தங்களது கல்வித்தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும்,
24
Seeman Statement
பணிநிரந்தரம் - காத்திருக்கும் விரிவுரையாளர்கள்
என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் எனும் பெரும் நம்பிக்கையிலேயே அவர்கள் சொற்ப ஊதியத்திற்கு இப்போதுவரை பணியாற்றி வருகின்றனர். அதுவும் மே மாதம் விடுத்து, 11 மாதங்களுக்கே அவர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், துறைத்தலைவர்கள் இல்லாத பல கல்லூரிகளில் இவர்கள்தான் தூணாக நின்று தாங்கிப் பிடித்து,
இலட்சக்கணக்கானப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர். பல்கலைக்கழக மானியக்குழு கௌர விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதனை சென்னை, உயர் நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது.
34
Guest lecturers protest
வாழ்வாதாரத்துக்காகப் போராட்டம்
இருந்தும், அம்முடிவு இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவுக்கருவறையாகத் திகழ்பவைக் கல்விக்கூடங்கள். அதனையுணர்ந்தே, மேலை நாடுகளில் ஆசிரியர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு ஆசிரியப் பெருமக்களே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட வேண்டிய மோசமான நிலையிருப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆகவே, தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும்,
44
Permanent appointment of honorary lecturers
நாம் தமிழர் துணை நிற்கும்
அவர்களது பணியினை நிலைப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசுக்கு வலியுறுத்துகிறேன். கௌரவ விரிவுரையாளர் பெருந்தகைகள் தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முன்னெடுத்து வரும் தொடர் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு கோரிக்கைகள் வெல்ல துணைநிற்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.