என்டிஏ குடும்பத்தில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி! தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி! பிரதமர் மோடி!

Published : Apr 12, 2025, 07:50 AM ISTUpdated : Apr 12, 2025, 07:54 AM IST

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைவதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

PREV
14
என்டிஏ குடும்பத்தில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி! தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி! பிரதமர் மோடி!
2026 Assembly Elections

2026 சட்டப்பேரவை தேர்தல்

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது  என்று 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், மீண்டும் பாஜகவுடன் அதிமுக கைகோர்க்க உள்ளதாகவும் சில நிபந்தனைகள் இபிஎஸ் வைத்ததாகவும் தகவல் வெளியானது. 

24
BJP - AIADMK alliance

பாஜக - அதிமுக கூட்டணி

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தந்த அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தே அமித் ஷா  வரும் தேர்தலில் அதிமுக,  பாஜக இணைந்து செயல்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி இருக்கும். இந்த கூட்டணி 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றிக்கு பிறகு மற்றவை குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக, பாஜக கூட்டணி இருவருக்குமே பலன் அளிக்கக்கூடியது. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பின்பு பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி! அமித் ஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

34
pm modi

பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம். மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும்  ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

44
DMK

திமுகவை என்டிஏ கூட்டணி வீழ்த்தும்

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் என தெரிவித்துள்ளார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories