பாஜக, அதிமுக கூட்டணி உறுதியான பிறகு அமித்ஷா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து அளித்தார். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணியில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், மீண்டும் கூட்டணி வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மற்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டது என கருத்து தெரிவித்துள்ளன. இந்நிலையில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.