நெருங்கும் புயல் சின்னம்; ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை; இந்த மாவட்டங்களுக்கு குறி; சென்னையில் எப்படி?

Published : Dec 24, 2024, 08:04 AM IST

தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
14
நெருங்கும் புயல் சின்னம்; ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை; இந்த மாவட்டங்களுக்கு குறி; சென்னையில் எப்படி?
Heavy Rain

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்களில் மட்டுமின்றி  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் 34 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

24
Tamilnadu rains

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் சின்னம் மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு இடையே நிலைகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொழில் தொடங்க 15 லட்சம் ரூபாய் ஆதார நிதி.! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

34
Chennai Rains

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னத்துக்கு குளிர் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிதளவில் மழை பெய்யவில்லை. இருப்பினும் புயல் சின்னம் தமிழகம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் இன்று முதல் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

44
Rain in Tamilnadu

இந்த புயல்சின்னம் தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து டிசம்பர் 26ம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் இறங்கும். இதனால் டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்யும். மேலும், டிசம்பர் 18ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு 5 ஆயிரம் ரூபாய்.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கடிதம்

Read more Photos on
click me!

Recommended Stories