மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆடி மாத உண்டியல்! அள்ள அள்ள தங்கம்! கோடிகளில் குவிந்த காணிக்கை!

Published : Aug 22, 2025, 10:57 AM IST

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பக்தர்கள் ரூ.1.30 கோடி ரொக்கம், 174 கிராம் தங்கம் மற்றும் 1.36 கிலோ வெள்ளி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

PREV
14

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

24

இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதலுக்காக அம்மனுக்கு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி அம்மனை வழிபட்டு அம்மன் அருளை பெற்று செல்கின்றனர். இவ்வாறு அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

34

இதில், ரூ.1.30 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 174 கிராம் தங்கம் மற்றும் 1.36 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

44

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் சக்திவேல், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், செஞ்சி ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் சுரேஷ் ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி, மணியம்குமார், மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமி, கணக்காளர் சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மேலும் உண்டியல் எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் மேல்மலையனூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories