இத்திட்டத்தில், ரூபாய் 10 இலட்சம் முதல் ரூபாய் 20 இலட்சம் வரையிலான மதிப்பில் உழவர்நல சேவை மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இம்மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும். பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்; முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற உதவுவது மட்டுமல்லாமல், வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது.