ஏப்ரல் 17ம் தேதி முதல் மாஸ்க் கட்டாயம்.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்

First Published Apr 16, 2023, 12:12 AM IST

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தேவையான தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ம் தேதி முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்

click me!