விஜய்க்கு ஆதரவாக நச்சுனு ஒரே பதிவு! கட்சி தாவுகிறாரா ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி? பரபரக்கும் அரசியம் களம்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
26
மருது அழகுராஜ்
2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மருது அழகுராஜிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் உச்சம் அடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது.
36
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்
இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். தற்போது ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுவர் மருது அழகுராஜ். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.
46
தமிழக வெற்றிக் கழகம்
இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகுராஜ் விஜய்க்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள பதிவு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
56
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;-
புரட்சித் தலைவரை "வாத்யாரே" என்றும்
புரட்சித் தலைவியை "அம்மா" என்றும்
அழைத்து நெகிழ்ந்து மகிழ்ந்த
ஏழை எளிய சனங்கள்
விஜய்யை
"அண்ணா வா"
அன்னைத்
தமிழ் மண்ணை
" ஆள வா" என அழைக்கும் காலம் தொடங்கி விட்டது என தெரிவித்துள்ளார்.
66
விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழகம்
இதற்கு முன்னதாக ஒரு பதிவில்: தொடர்ந்து தோற்றும்
பல போட்டிகளில் பங்கேற்க கூட திராணியின்றி
கரை ஒதுங்கி கிடக்கும்
ஓட்டைப் படகு...
குழுக்கள் பல சேர்ந்து
தள்ளித் தள்ளியே
கரைசேர்க்கும்
கணக்கோடு
ஒரு குடும்பப் படகு...
புத்தம் புதிதாக
இள ரத்தங்களோடு
துள்ளிப்பாய்ந்திட
ஆயத்தமாகும்
ஒரு வெற்றிப்படகு
என
முதுமைக்கும்
இளமையிலான
புதுமைக்குமான
போட்டியாக
2026 அமையுமோ என விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சூசகமாக குறிப்பிட்டு மருது அழகுராஜ் பதிவிட்டுள்ளார் .