அதிமுகவில் கோகுல இந்திராவின் புகார் மற்றும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட நிகழ்வைப் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
செங்கோட்டையன் கோவத்திற்கு காரணம் என்ன.? ஜெயக்குமார் கொடுத்த புதிய விளக்கம்
அதிமுகவில் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை உட்கட்சி மோதல் பெரிய அளவில் இல்லாத நிலையில், தற்போது ஆளுக்கு ஒரு பக்கம் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கட்சி நிர்வாகிகளை மீது புகார் கூறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொள்ளும் நிகழ்வையே மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் புறக்கணித்து அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறுகையில்,
25
கோகுல இந்தியா ஆவேசம்
அத்திக்கடவு- அவிநாசி திட்டங்களுக்கு முக்கிய நபராக இருந்த ஜெயலலிதா புகைப்படம் இல்லையெனவும், இந்த திட்டத்திற்காக முதலில் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கியதே ஜெயலலிதா தான் என குறிப்பிட்டார். இதன் காரணமாகவே நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையெனவும் கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பெட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
35
செங்கோட்டையன் புறக்கணிப்பு
அப்போது பேசிய அவர், கோகுல இந்திரா indoor மீட்டிங்கில் பேசியுள்ளார். கட்சியினருக்கு இடையே பேசிய கருத்து.அதை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. கட்சியினருக்கு மனக்குறை எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளரிடம் முறையிடலாம் என தெரிவித்தார். அடுத்தாக அத்திக்கடவு அவினாசி கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு. பதில் அளிக்கையில், அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.
45
விவசாயிகள் ஏற்பாடு செய்த திட்டம்
இ.பி.எஸ். ஆட்சியிலேயே 80% அளவிற்கு பணி முடிவுற்றதாகவும் மீதமுள்ள 20% பணியை திமுக மெத்தனமாக கடந்த 3 ஆண்டுகளாக பணியை மெற்கொண்டதாக தெரிவித்தார். எனவே அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு உண்மையான காரணம் ஜெயலலிதாவும், இ.பி.எஸ்.ம் தான். எல்லா கட்சியையும் சார்ந்த விவசாயிகள் அத்திக்கடவு அவினாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதிமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லையென ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
55
மறைமுக கூட்டணி இல்லை
பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லையென தெரிவித்தனர், வெட்டு ஒன்னு, துண்டு ரண்டு என்பதுதான் எங்களுக்கு தெரியும். பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார். அந்த நிலைபாடே தொடர்கிறது என ஜெயக்குமார் கூறினார்.