ஒரே அறிவிப்பில் இபிஎஸ்-ஐ காலி செய்த முதல்வர் ஸ்டாலின்... இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் இல்லத்தரசிகள்..

Published : Feb 13, 2026, 08:47 AM IST

முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகையை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.5000 வரவு.

PREV
15
மகளிர் உரிமை தொகை திட்டம்

மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வந்தது.

25
தமிழகத்தை பின்பற்றும் மாநிலங்கள்

இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் திமுகவின் செல்வாக்கு உச்சம் அடைந்ததாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஆகையால் தமிழ்நாட்டை பின்பற்றி கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

35
மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

அந்த வகையில் தற்போது திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த திட்டத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டு டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது புதிதாக 16,94,339 பேர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படும் என கூறப்பட்டு வந்தது. அதாவது ரூ.1500 அல்லது ரூ.2000 என சந்தேகம் இருந்து வந்தது.

45
மகளிர் உரிமைத் தொகை உயர்வு

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை உயர்த்தி காலையே முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் ஆட்சி 2.0.இல் ரூ.1000 உரிமைத்தொகை உயர்த்தி ரூ.2000ஆக வழங்குவோம் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைக்காலச் சிறப்பு தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்படுகிறது.

55
எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

 ஏற்கனவே அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அலறவிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories