அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் ஆகியோருக்கு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக விதிகளில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த திருத்தங்களை எதிர்த்தும், 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை நடைபெற்ற உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அந்த கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
24
வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி வேல்முருகன் அதிமுக தொண்டர்கள் சார்பாக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு இருவருக்கும் அனுமதி அளித்து 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
34
கட்சி உறுப்பினரே இல்லை
மேலும் தற்போது விதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை தொண்டர்களே கிடையாது. கட்சியின் தொண்டர்களே பொதுச்செயலாளரை பிரதிநிதிப்படுத்த முடியும். அப்படி இருக்கையில் கட்சியில் உறுப்பினரே இல்லாத ஒருவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்று வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதிமுக உறுப்பினர்களாக இல்லாத சுரேன் மற்றும் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்க செய்ய உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இருந்த நெருக்கடி சற்று குறைந்துள்ளது.