உனக்கெல்லாம் சால்வையா? தூக்கி எறிந்த பகுதி செயலாளர் மகன்! பதறிய திமுக எம்எல்ஏ சுதர்சனம்!

Published : Mar 23, 2025, 05:28 PM ISTUpdated : Mar 23, 2025, 05:41 PM IST

DMK MLA Sudharsanam Vs Puzhal Narayanan Clash: புழல் நாராயணன் மகன் அஜய், எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் சால்வையை தூக்கி எறிந்து தகராறு செய்துள்ளார். 

PREV
15
உனக்கெல்லாம் சால்வையா? தூக்கி எறிந்த பகுதி செயலாளர் மகன்! பதறிய திமுக எம்எல்ஏ சுதர்சனம்!
Puzhal Narayanan

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்த்த நாராயணன் கடந்த 2011ஆம் ஆண்டு காலத்தில் புழல் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்படும்  நிலையில் புழல் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக  அடி மட்டத்தில் இறங்கி வேலை செய்து வந்திருக்கிறார். 

25
Sudharsanam

 இதனால் அவரது மனைவி கவிதா நாராயணனுக்கு கடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் வட பெரும்பாக்கம் 19வது வட்டத்தில் திமுக கவுன்சிலராக போட்டியிட்டார். ஆனால் வெறும் 117 வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரிடம்  அவர் தோல்வியை தழுவினார். ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் தற்போது சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி ஏற்றி இருப்பார் எனக் கூறப்பட்டது. தனது மனைவி தோல்விக்கு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் காரணம் என தகவல்கள் வெளியாகின. 

35
Madhavaram DMK MLA sudharsanam

மாதவரம் சட்டமன்ற உறுப்பினரான சுதர்சனம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வரும் நிலையில் அவரின் பதவிக்கு புழல் நாராயணன் வலை விரித்ததாக கூறப்படுகிறது. இதற்காக முதலமைச்சரிடம் நற்பெயர் பெரும் நோக்கத்தில் அடிக்கடி மாதவரம் சுற்றுவட்டாரங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்திருக்கிறார் நாராயணன். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை கட்டாயமாக தவிர்த்து வந்த அவர் தனது தலைமையின் கீழ் மட்டுமே நிகழ்ச்சி நடக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார். 

45
DMK Puzhal Narayanan

புழல் நாராயணன் தந்திர வேலைகளை அறிந்து கொண்ட சுதர்சனம் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவெடுத்ததாக தெரிகிறது. அதற்காகவே நாராயணன் மனைவியை தேர்தலில் தோற்கடித்தது மட்டுமல்லாமல், நாராயணன் மகன் அஜய்க்கு கட்சியின் பொறுப்பு வழங்குவதிலும் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கோஷ்டி மோதல் நிலவி வந்ததாலும் வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. 

55
sudharsanam Vs Puzhal Narayanan

இந்நிலையில் புழல் நாராயணனின் மகன் அஜய்க்கு திமுக இளைஞர் அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று திமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக மகனை அழைத்துச் சென்றுள்ளார் நாராயணன். அப்போது எம்எல்ஏவுக்கு சால்வை அணிவிக்க மகனிடம் கூறியிருக்கிறார். சால்வை அணிவித்த  சில நிமிடங்களில் ஆத்திரமடைந்த புழல் நாராயணனின் மகன் உனக்கெல்லாம் சால்வையா என கூறி தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவரை அடிக்க பாய்ந்தார். உடனே அங்கிருந்த பாதுகாவாலர்கள் தடுத்து அவர்களை வெளியேற்றினர்.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories