ஆனால் தற்போது 5,514 லாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் 2,036 லாரிகள் ஒப்பந்தங்களை இழக்கும் நிலை உருவாகி, ஓட்டுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஏல விதிகளை ரத்து செய்து விட்டு பழைய ஏல விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.
சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு அபாயம்
எண்ணெய் நிறுவனங்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வேலைநிறுத்த போராடத்தை தொடர்ந்து வந்தனர். LPG லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கிடையே டேங்கர் லாரிகள் வேலை நிறுத்ததுக்கு தடை விதிக்க வேண்டும் என 3 எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.