ஸ்மார்ட்போன் இருந்தா போதும்! ஒரிஜினல் வாக்காளர் அட்டையை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

Published : Mar 24, 2026, 10:56 AM IST

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில் அதற்காக நீங்கள் அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான வழியை தெரிந்த கொள்வோம்.

PREV
15
வாக்காளர் அட்டையை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை எளிதாகப் பெறும் வகையில் e-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விரிவாக தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் ஜனநாயகம் வலுப்பெற வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கியமானது. முன்னெல்லாம் வாக்காளர் அட்டை தொலைந்து போனால் அல்லது புதிய அட்டை தேவைப்பட்டால் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டியிருந்தது. ஆனால், இப்போது உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலமாகவே ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

25
e-EPIC என்றால் என்ன?

e-EPIC என்பது உங்கள் பிளாஸ்டிக் வாக்காளர் அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். இது PDF வடிவில் இருக்கும். இதில் ஒரு பாதுகாப்பான QR கோடு இருக்கும். இதை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேட் செய்தும் பயன்படுத்தலாம். இது ஒரிஜினல் வாக்காளர் அட்டைக்கு இணையான சட்டப்பூர்வ அங்கீகாரம் கொண்டது.

தேவையான ஆவணங்கள்

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number).

வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.

இணைய வசதி கொண்ட கணினி அல்லது ஸ்மார்ட்போன்.

35
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Step-by-Step Guide):

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

முதலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும்.

லாகின் அல்லது பதிவு செய்தல் (Sign In / Register)

உங்களிடம் ஏற்கனவே கணக்கு (Account) இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும். புதிய பயனர் என்றால், 'Sign Up' ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண் மூலம் ஒரு புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

e-EPIC Download ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்

லாகின் செய்த பிறகு, திரையில் தோன்றும் பல விருப்பங்களில் 'E-EPIC Download' என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

45
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Step-by-Step Guide):

விவரங்களை உள்ளிடவும்

இப்போது உங்களிடம் இரண்டு விருப்பங்கள் கேட்கப்படும்:

EPIC Number: உங்களிடம் வாக்காளர் அட்டை எண் இருந்தால் அதை உள்ளிடலாம்.

Form Reference Number: நீங்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட ரெஃபரன்ஸ் எண்ணைப் பயன்படுத்தலாம்.

உங்கள் எண்ணை உள்ளிட்ட பிறகு, மாநிலத்தைத் (Tamil Nadu) தேர்ந்தெடுத்து 'Search' என்பதை அழுத்தவும்.

மொபைல் எண் சரிபார்ப்பு (OTP Verification)

உங்கள் விவரங்கள் திரையில் தோன்றும். அதன் கீழே உள்ள 'Send OTP' பட்டனை அழுத்தவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP வரும். அதை உள்ளிட்டு சரிபார்க்கவும்.

பதிவிறக்கம் செய்தல்

வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்ட பிறகு, 'Download e-EPIC' என்ற பட்டன் தோன்றும். அதை கிளிக் செய்தால், உங்கள் வாக்காளர் அட்டை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.

55
மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?

உங்கள் மொபைல் எண் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் முதலில் 'Form 8' மூலம் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். அதன் பிறகே ஆன்லைனில் டவுன்லோட் செய்ய முடியும்.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்பது அவசரத் தேவைகளுக்கும், அடையாளச் சான்றாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேர்தல் நேரங்களில் பூத் ஸ்லிப் (Booth Slip) கிடைக்காத பட்சத்தில், இந்த டிஜிட்டல் அட்டையை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories