10th 12th Exam Dates
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரையும், 11-ம் பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
minister anbil mahesh
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;- தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி பட்டியல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும். ஆகையால், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என்றார்.
இதையும் படிங்க;- 3 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து தப்புவாரா பொன்முடி? விசாரணைக்கு நாள் குறித்த உச்சநீதிமன்றம்.!
School Education
தற்போது அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள், நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை எளிய முறையில் தீர்த்து வைக்க, இணையவழி குறைதீர் புலம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.