கிருஷ்ணகிரியில் 5 மாத குழந்தை மூச்சுத்திணறி இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தந்தையின் புகாரால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. விசாரணையில், ஓரின சேர்க்கை உறவுக்கு தடையாக இருந்ததால், தாயும் அவரது தோழியும் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது அம்பலமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் மற்றும் 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 4ம் தேதி பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து தாய் பாரதி கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
24
உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள்
குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி யாதர்த்தமாக சுரேஷ் மனைவி பாரதியின் செல்போனை எடுத்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 20 வயது இளம்பெண் ஒருவருடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இறந்த குழந்தையின் புகைப்படங்களும் வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
34
காவல் நிலையத்தில் புகார்
இது குறித்து குழந்தையின் தந்தை கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. குழந்தையின் தாய்க்கும், பக்கத்து வீட்டு பெண்ணான சுமித்ராவுக்கும் ஓரின சேர்க்கை (லெஸ்பியன்) தகாத உறவு இருந்ததும், அதற்கு குழந்தை தடையாக இருந்ததால் குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் தாய், அவரது லெஸ்பியன் ஜோடியான இளம்பெண்ணை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.