மனோஜ் பாண்டியனை தொடர்ந்து அடுத்து இணையப்போகும் முன்னாள் அமைச்சர்? குஷியில் முதல்வர் ஸ்டாலின்

Published : Nov 08, 2025, 01:33 PM IST

முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய தலைவரான வைத்தியலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-சசிகலா தரப்பு என மும்முனை போட்டி நிலவி வருகிறது. 

PREV
15
ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தனர். இதனையடுத்து ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் வெடித்ததை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது எம்எல்ஏக்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகு ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்புக் குழுவை ஆரம்பித்தார்.

25
இபிஎஸ் திட்டவட்டம்

அதிமுக தலைமை ஏற்று இபிஎஸ் சந்திக்க உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தழுவினார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவுக்கு முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றி என்று ஓபிஎஸ், பாஜக, கே.சி.பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பு பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறிவருகின்றனர். ஒருங்கிணைப்பு என்று அதிமுக நிர்வாகிகள் பேச்சை எடுத்தாலே கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணம் செங்கோட்டையன்.

35
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த முன்னாள் சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியனின் மகனும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த கையோடு தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் தென் மாவட்டங்களில் திமுகவும் கூடுதல் வலிமை பெற்றுள்ளது.

45
வைத்திலிங்கம்

இந்நிலையில் டெல்டாவை மேலும் வலுப்படுத்த திமுகவின் அடுத்த டார்கெட் ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தான் என்று கூறப்பட்டு வருகிறது. இதனை அறிந்த இபிஎஸ், இவரை அதிமுகவில் இணைக்கும் வேலைகளை ரகசியமாக செய்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ், டிடிவி. தினகரன், செங்கோட்டையன், சசிகலா அடங்கிய நால்வர் அணியும் இவர் திமுகவில் இணையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மறுபுறம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

55
திமுகவில் இணைய திட்டம்

ஆனால் திமுக டெல்டாவில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வரும் வைத்தியலிங்கத்தை எப்படியாவது திமுகவில் இணைக்கும் பொறுப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏ வைத்தியலிங்கம் எந்த கட்சி நிகழ்விலும் பங்கேற்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories