தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின், 'இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்' என்ற கருத்துக்கு, பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் விளக்கமளித்துள்ளார்.
ADMK BJP alliance : தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்களை முடிந்து 5ஆம் வருடத்தில் கால் எடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 10 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணியை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க அதிமுக திட்டமிட்டது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தியது. ஆனால் விஜய் உடன்பட்டு வராத காரணத்தால் புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டது.
24
Tamilnadu Assembly Election
பாஜகவுடன் அதிமுகவின் கூட்டணி
அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவோடு கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மீண்டும் பாஜகவோடு எப்போதும் கூட்டணி இல்லையென அறிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலையே பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார் எடப்பாடி பழனிசாமி,
இதனை தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் அமித்ஷாவும் சென்னை வந்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். இந்த அதிமுக- பாஜக கூட்டணியை அதிமுகவின் முதல் கட்ட தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
34
Admk Bjp alliance
இரட்டை இலைக்கு மேலே தாமரை
இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை விமர்சித்து வரும் நிலையில், இந்த முறை சட்டமன்றத்துக்கு பாஜகவைச் சேர்ந்த அதிக எம்எல்ஏக்கள் செல்வார்கள். தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். மேலும் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என தெரிவித்திருந்தார்.
எனவே அதிமுகவை விட அதிக இடங்களில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது.இது தொடர்பாக பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூ எப்போதும் மேலே தான் இருக்கும் இலை கீழே தான் இருக்கும்.
44
kp ramalingam
இரட்டை இழை கிழே தான்- மேலே தான் தாமரை மலரும்
அர்த்தம், பொருள் புரியாதவர்களிடம் பேச முடியாது. இரட்டை இலையை விட தாமரை அதிகமாக மலரும் என்று சொன்னால் இந்த பேச்சுக்கு வரலாம். இரட்டை இலையை நசுக்கி தான் தாமரை மலருமா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், நசுக்கி, பிசுக்கி என்ற கேள்வி எல்லாம் அமைச்சர் பொன்முடியிடம் கேளுங்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசியவர் இரட்டை இழை கிழே தான். மேலே தான் தாமரை மலரும். இது எண்ணிக்கை அல்ல, காட்சியை பாருங்கள் என தெரிவித்தார். எப்போதும் மேலே பூ தான் இருக்கும். பூ கீழே இருக்காது. இலை மறைவு காய் எனவே இதனை புரிந்து கொள்ள வேண்டும் என கேபி ராமலிங்கம் தெரிவித்தார்.