அதாவது கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறைகள், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய நான்கு சுற்றுலாத் தலங்களுக்கும் இனி ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெறும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது தூண் பாறைகள், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய 4 இடங்களுக்கும் ஒரே இடத்தில் டிக்கெட் பெற்று இனிமேல் ஜாலியாக சுத்தி பார்க்கலாம்.
ஜாலியாக எல்லா இடத்தையும் பார்க்கலாம்
இதுவரை இந்த 4 இடங்களுக்கும் அந்ததந்த பகுதிகளுக்கு சென்று தான் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு இடத்திலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் அனைத்து இடங்களையும் சுத்தி பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.