அகில இந்திய கராத்தே போட்டி! அசத்தும் பள்ளி மாணவி! இதுவரை 27 பதக்கங்கள் வென்று சாதனை!

First Published | Nov 27, 2024, 6:21 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி குரு அனுஸ்ரீ, கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டிசம்பரில் டெல்லியில் நடைபெறும் அகில இந்திய கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே 27 பதக்கங்களை வென்றுள்ளார்.

School Student

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காரடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த குருநாதன் - கவிதா தம்பதி. இவரது மகள் குரு அனுஸ்ரீ. இவர் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் கராத்தே நேஷனல் வீராங்கனை ஆவார். 

Karate Competition

இந்நிலையில், மதுரை அருகே உள்ள திருமங்கலம் சண்முக லட்சுமி மண்டபத்தில் வேல்ட் சோடோகன் கராத்தே பெட்ரேஷன் டூ இந்தியா நடத்திய கராத்தே போட்டி  நடைபெற்றது. இந்த போட்டியில் குமிட்டே பிரிவில் களம் கண்டு அசத்தியது மட்டுமல்லாமல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

Latest Videos


Gold winning

இவர் வரும் டிசம்பர் 13 -ம் தேதி டெல்லியில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் ஏற்கனவே 27 பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைகள் புரிந்து வரும் குரு அனுஸ்ரீயை சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Won Gold in Karate Competition

சாதனைகள் புரிந்து வரும் குரு அனுஸ்ரீயை சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

click me!