சென்னையில் பயங்கர விபத்து! சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட 5 பெண்கள் பலி! நடந்தது என்ன?

First Published | Nov 27, 2024, 4:34 PM IST

ஓ.எம்.ஆர். சாலையில் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Car Accident

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு ஓ.எம்.ஆர். சாலையில் பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 பெண்கள் அங்கு சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக அதிகவேகத்தில் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த பெண்கள் மீது மோதியது. 

Mamallapuram Car Accident

இந்த விபத்தில் சினிமா பாணியில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் விபத்தை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்த அப்பகுதியினர் சரமாரியாக தாக்கினர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். 

Tap to resize

College Student

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒரே வழியாக பொதுமக்களிடம் சிக்கிய  இளைஞர்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்த 5 பெண்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தை ஏற்படுத்தியது கல்லூரி மாணவர்கள் என்பதும் அவர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்ததுள்ளது. 

Police investigation

உயிரிழந்த 5 பெண்களும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள், விஜயா, யசோதா, ஆனந்தம்மாள், கௌரி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

MK Stalin

இதனிடையே  கார் மோதியதில் உயிரிழந்த 5 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Latest Videos

click me!