ஏரியாவில் ரவுடினு கெத்து காட்டதான் வசூல் ராஜாவை கொலை செய்தோம்! கைதான கல்லூரி மாணவர்கள் பகீர் தகவல்!

Published : Mar 16, 2025, 10:55 AM ISTUpdated : Mar 16, 2025, 10:57 AM IST

Kanchipuram Rowdy Vasool Raja Murder Case: காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரிய ரவுடியாக வரவேண்டுமென கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

PREV
15
ஏரியாவில் ரவுடினு கெத்து காட்டதான் வசூல் ராஜாவை கொலை செய்தோம்! கைதான கல்லூரி மாணவர்கள் பகீர் தகவல்!
Kanchipuram Rowdy Vasool Raja

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு கே.டி.எஸ். மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் ராஜா (எ) வசூல் ராஜா(40).  சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருகாலிமேடு ரேஷன் கடை முன்பு பட்டப்பகலில் மர்ம கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

25
Vasool Raja Murder

இந்த  கொலை சம்பவம் தொடர்பாக வசூல் ராஜாவின் தாய் சரஸ்வதி (58) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்தவர்கள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி ஓடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதையும் படிங்க: என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!

35
College Student Arrest

இதனையடுத்து 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 10 பேர் சேர்ந்து இந்த கொலை சம்பத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இவர்களில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன் (எ) பரத் (19), சிவா (19), திருக்காலிமேடு திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் (25), சுல்தான் (32), மோகனசுந்தரம் (18), சின்னகாஞ்சிபுரம் சரண்குமார்(20), ராணிப்பேட்டை, நெமிலி மணிமாறன்(19) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தப்பிக்க முயற்சித்த போது பலருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 9 கத்தி, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

45
shocking information

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. பெரிய ரவுடியாக வரவேண்டும் என்றால் ஒருவரை கொலை செய்தால் மட்டுமே அது முடியும் என்பதால் வசூல் ராஜாவை கொலை செய்தோம் என்றனர். அவரை கொலை செய்ய தியாகு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைதான 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

55
Vasool Raja News

ஏரியாவில் பெரிய ஆளாக உருவெடுக்கப் பிரபல ரவுடியை கொலை செய்தார்களா? அல்லது பழிக்கு பழியா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரபல ரவுடி வசூல்ராஜா கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் கைதாகி இருப்பது காஞ்சிபுரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தின் ரவுடி பொய்யாக்குளம் தியாகுவும், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அசோக் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

click me!

Recommended Stories