நா.த.க.வில் இருந்து விலகியது ஏன்? தவெகவில் இணைய முடிவா? மனம் திறந்த காளியம்மாள்!

Published : Apr 28, 2025, 09:11 AM IST

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது ஏன்? என்பதற்கு காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் எந்த கட்சியில் சேரப் போகிறார்? என்பது குறித்தும் பேசியுள்ளார். 

PREV
14
நா.த.க.வில் இருந்து விலகியது ஏன்? தவெகவில் இணைய முடிவா? மனம் திறந்த காளியம்மாள்!

Kaliammal explained why she left the Naam Tamilar Party: சீமானின் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சிறந்த பேச்சாளரான காளியம்மாள் விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பின்பு அவர் வேறு கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த கட்சியிலும் இணையவில்லை. 

24
Kaliammal, Naam Tamilar Party

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், ''நாம் தமிழர் கட்சியில் பயணித்தபோது எனக்கு எதிராக தவறான தகவல் பரப்பப்பட்டது. இது குறித்து சீமானிடம் சொன்னபோது அவர், 'நான் உன்னை ஏதாவது கேட்டேனா? கட்சியில் வளர்ந்து வரும்போது ஒரு சிலருக்கு அது முரணாகத்தான் இருக்கும். இனி உன் வேலையை தொடர்ந்து செய் என்று தெரிவித்தார்'' என்று காளியம்மாள் கூறினார்.

உங்களை விமர்சித்து சீமான் பேசிய ஆடியோ வெளியானதுதான் மனக்கசப்புக்கு காரணமா? என்று கேட்டபோது, இதற்கு பதில் அளித்த காளியம்மாள், ''அந்த ஆடியோ வெளி​யான​போது எனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அந்த வீடியோவை நான் சீமானுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது சீமான் 'நான் என்றுமே உன்னை அப்படி நினைக்க மாட்டேன். மனதில் ஏதூம் வைத்துக் கொள்ளாதே' என்றார். அதன்பிறகு நான் கட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றனர். ஆனால் நான் கட்சியில் இருந்து வெளியேறிய சம்பவங்களை சொல்ல விரும்பவில்லை'' என்று கூறினார்.

தொடர் விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! ஃபாலோ பண்ணுங்க!

34
Naam Tamilar Party, Tamilnadu

மக்களுக்கு பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்து தனக்கென கூட்டம் சேர்த்தார்; கட்சியை விட தன் வளர்ச்சியை பெரிதாக நினைத்தார் என சீமான் குற்றம்சாட்டி இருந்தது குறித்து பேசிய காளியம்மாள், ''இது ஒரு ஆடியோவில் வெளியான குற்றச்சாட்டு. சுனாமி குடி​யிருப்​பில் குடி​யிருக்​கும் நான் பணம் கொடுத்து எப்படி கூட்டம் கூட்ட முடியும்? ஏன் இப்படி பேசினீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள்? என்று நான் சீமானிடமே நேரடியாக இதை தெரிவித்து விட்டேன்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அடுத்து எந்த கட்சியில் சேரப் போகிறீர்கள்? என்று கேட்டபோது அதற்கு பதில் சொன்ன காளியம்மாள், ''அனைத்து கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதில் சேர்வ்து என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதற்கான முடிவை மே மாதத்துக்குள் அறிவிப்பேன்'' என்று பேசினார்.

44
seeman, vijay, Kaliammal

திமுகவில் சேர முடிவா? என்று கேட்டதற்கு பதில் அளித்த காளியம்மாள், ''அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய ச‌ட்​டசபை​யில் பேசுவதற்கு வாய்ப்​புள்ள கட்​சி​யாகக்​கூட அது இருக்கலாம்'' என்றார். தவெகவால் நாம் தமிழர் வாக்கு வங்கியில் கடுமையாக சரிவு ஏற்படும் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் சொன்ன காளியம்மாள், ''அப்படி கூற முடியாது. ஆனால் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்று அரசியலை பலரும் விரும்புகிறார்கள். விஜய் அண்ணனுக்கு பெரிய ரசிகர் பட்​டாளம் இருக்​கிறது. அவர்​களை அரசி​யல்​படுத்த வேண்டும்'' என்று கூறி முடித்தார்.

வீடு தேடி வரப்போகும் ரேஷன் பொருட்கள்! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்!

 

Read more Photos on
click me!

Recommended Stories