ஒரு நீதிபதி இப்படி பேசலாமா?.. விஜய் குற்றவாளி இல்லை.. வெளிப்படையாக பேசிய அண்ணாமலை!

Published : Oct 06, 2025, 02:38 PM IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெகவை கடுமையாக விமர்சித்த நீதிபதிக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் விஜய்யை மட்டும் குற்றவாளியாக கருத முடியாது என்று கூறியுள்ளார்.

PREV
15
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் தவெகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

25
விஜய்யை கடுமையாக விமர்சித்த நீதிபதி

''தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. சம்பவத்தை தொடர்ந்து விஜய்யும், தவெக நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். என்ன மாதிரியான கட்சி இது'' என்று நீதிபதி விமர்சன கணைகளை தொடுத்திருந்தார். நீதிபதி செந்தில் குமாரின் கருத்தை தொடர்ந்து தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தனர். அவர் குடும்ப பின்னணியை வைத்தும் விமர்சனம் செய்தனர்.

35
நீதிபதி மீது பாய்ந்த தவெக தொண்டர்கள்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி செந்தில்குமார், ''சமூகவலைத்தளங்களில் இப்போது யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர். நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தால் அவர்கள் குடும்பங்களையும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாக விமர்சிக்கின்றனர்'' என்று வேதனை தெரிவித்தார். இந்நிலையில், தவெக குறித்து நீதிபதி பேசியது சரியானது அல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

45
நீதிபதி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''தவெக குறித்து நீதிபதி பயன்படுத்திய வார்த்தை சரியானதா? வழக்கு விசாரணை முடியும் முன்பே நீதிபதி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவர் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் பேசுபொருளாகியுள்ளது. ஆனாலும் நீதிபதி பேசியதை அரசியலாக்க வேண்டாம். இது எனது தனிப்பட்ட கருத்து பாஜகவின் கருத்து அல்ல'' என்று தெரிவித்தார்.

55
விஜய் குற்றவாளி இல்லை

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ''கரூர் சம்பவத்தில் விஜய்யை எந்த இடத்திலும் பாஜக காப்பாற்றவில்லை. நியாயத்தை தான் பேசுகிறோம். கரூர் சம்பவத்தில் தவெக மீதும், விஜய் மீதும் தவறு இல்லை. ஆனால் அவரை மட்டும் குற்றவாளியாக கருத முடியாது என்பதை தான் நாங்கள் முதலில் இருந்து சொல்லி வருகிறோம். 

விஜய் மீது வழக்குப்பதிவு செய்தாலும் அது நிற்காது. விஜய்க்கு பாஜக ஆதரவு கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். திமுக அரசு தான் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்கிறது. அதன்பிறகு ஏன் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?'' என்று கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories