ராமதாஸ் உடல் நிலை எப்படி இருக்கு.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை

Published : Oct 06, 2025, 01:55 PM IST

Apollo Hospital statement : பாமக நிறுவனர் ராமதாஸ், இதயப் பிரச்சனைக்கான வழக்கமான பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

PREV
13

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் (86 வயது) நேற்று (அக்டோபர் 5, 2025) இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது இதயம் சார்ந்த பிரச்சனைக்கான வழக்கமான பரிசோதனை என கட்சி வட்டார தகவல்கள் வெளியாகியிருந்தது. 

இதனையடுத்து இன்று (அக்டோபர் 6) காலை ராமதாசுக்கு ஆஞ்சியோகிராமி (ஆஞ்சியோ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ராமதாஸ் ஐ.சி.யூவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

23

இதனிடயையே ராமதாஸின் மகனும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தந்தையை சந்திக்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். அன்புமணி, தனது தாயை (ராமதாஸின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் உடல் நிலை தொடர்பாக கேட்டறிய மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களிடம் ராமதாஸ் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.

33

இந்த நிலையில் ராமதாஸ் உடல் நிலை தொடர்பாக அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர்.ஜி.செங்கோட்டுவேலுவின் கீழ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸ் உடல் நிலை தொடர்பாக முழுமையான பரசோதனை செய்யப்பட்டு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories