மேலும் பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிகவும் என்டிஏ கூட்டணியில் இணையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.
இந்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தலுக்கான பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயலை இன்று (ஜனவரி 22) சந்தித்து பேசினார்.
10 தொகுதிகள் கேட்டுள்ளோம்
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், ''பியூஸ் கோயல் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை இனிதாக நடைபெற்றது. நாங்கள் 10 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம். 10 தொகுதிகல் அடங்கிய பட்டியலை அளித்துள்ளோம்.
இது குறித்து பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளின் பட்டியலை தான் கொடுத்திருக்கிறோம்.