Tamilnadu Public Holiday: தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வரும் நிலையில், அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை அக்டோபர் 1ம் தேதி (புதன்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இது அரசு விடுமுறை நாளாகும். 2ம் தேதி (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி என்பதால் அன்றும் அரசு விடுமுறை நாள் தான். இதன்பிறகு அக்டோபர் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு வேலை நாள் ஆகும்.
24
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை
தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதி (சனிக்கிழமை), 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் விடுமுறை வருகிறது. ஆகவே இடையில் இருக்கும் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் விடுமுறை விடப்பட்டால் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆகையால் 3ம் தேதியை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
34
அக்.3ம் தேதி பொது விடுமுறையா?
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வரும் 3ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குஷியில் துள்ளிக் குதித்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை அல்ல. இது தொடர்பாக தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று TN Fact Check எனப்படும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆனாலும் அவர்கள் அக்டோபர் 3ம் தேதி மட்டும் லீவு எடுத்தால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் அலை அலையாக செல்லத் தொடங்கியுள்ளனர். மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எந்த சிரமமின்றி செல்வதற்கு வசதியாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.