காங்கிரஸ் என்ன தமிழக அரசியலின் பாகுபலியா..? ஆட்சியைப் பிடிக்க ‘கை’ பலம் தேவையா..?

Published : Feb 17, 2026, 02:30 PM IST

தங்கள் பலத்தில்தான் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதாக காங்கிரஸ் கூறிக் கொண்டாலும், திராவிட கட்சிகளின் கூட்டணி தயவால்தான் இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அழியாமல் இருக்கிறது

PREV
16
உக்கிரமான உரசல்

மாநில கட்சியான திமுகவுக்கும், தேசிய கட்சியான காங்கிரசுக்கும் இடையே இருந்த அன்பும், நெருக்கமும் பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறடு. ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் முதலில் பேசத் தொடங்கியபோது திமுக அமைதியாக இருந்தது. காங்கிரஸின் எம்பிக்கள் சிலர் மட்டும் ஆட்சியில் பங்கு என தொடர்ச்சியாக பேசி வர, அப்போதும் திமுக கடந்துதான் சென்றது. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக ஆட்சியில் பங்கு என்ற ஒரே கோரிக்கை காங்கிரஸில் எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த அவதாரம் மிக தீவிரமாகி ராகுல் காந்தியையே திமுகவின் சமூக வலைத்தளவாசிகள் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளடு. உரசல் உக்கிரமாகி இருக்கிறது.

26
தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் என்ன?

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்காரர்கள் தங்கள் துணை இல்லாமல் ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது என பேசி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அமைத்த வரலாறு என்ன? காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணிதான் இதுவரை வெற்றி பெற்றிருக்கிறதா? தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் என்ன? என்பது குறித்தும் விரிவாக அலச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துதான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகிறது. 1996 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் உருவான நேரமும் கூட. அந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. ஒரு எம்எல்ஏ சீட்டை கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. 2001 தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நீடித்தது. அந்த தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதிமுகவும் திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

36
இரண்டாக உடைந்த காங்கிரஸ்

1996 காலகட்டத்தில் ஊழல் புகார்கள், கைது நடவடிக்கைகள் என பலகட்ட சிக்கல்களில் சிக்கிய ஜெயலலிதா 2001 -ல் மீண்டும் ஆட்சி அமைக்க முக்கிய காரணமே ஜெயலலிதாவின் கூட்டணி வியூகம்தான். ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததற்காக காங்கிரஸிலிருந்து வெளியேறி, தனி கட்சி தொடங்கிய ஜி.கே.மூப்பனார், ஜெயலலிதா கூட்டணியிலேயே இணைந்தார். இரண்டாக உடைந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் தனது தலைமையில் ஒன்றாக கூட்டணியில் ஐக்கியமாக்கினார் ஜெயலலிதா. 

அடுத்ததாக 2006 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணிக்கு வந்தது காங்கிரஸ். இந்த தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்டு 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணிதான் திமுகவின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அப்போது அதிமுக தரப்பில் இருந்த அதிருப்தி எக்கச்சக்கம்.

46
திமுக கூட்டணியில் வெளியேறிய காங்கிரஸ்

டெஸ்மா என்ற பெயரில் போராட்டம் நடத்திய ஒன்றே முக்கால் லட்சம் ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. அதோடு மதமாற்ற தடை சட்டம், கருணாநிதி மீதான கைது நடவடிக்கை, ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் கோபத்தை பெருக்கியது. இந்த தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனாலும் ஜெயலலிதா மீது அதிருப்தியில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்ததாக 2011 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இடம் பெற்றது. அந்த தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.

இடையில் 2014ல் திமுகவிடம் கோபித்துக் கொண்டு, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த தேர்தலில் தனித்து நின்று பலத்தை காட்டும் என்று பார்த்தால் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாமல் போனது. மத்தியில் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் 2016 தேர்தலில் மீண்டும் திமுக காங்கிரஸ் உறவு ஐக்கியமானது. ஆனால், அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் ஜெயலலிதா செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் அவருக்கு கை கொடுக்க, 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா.

56
காங்கிரஸாரின் வாய்ப்பெருமை

2021 தேர்தலிலும் திமுகவின் கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடித்தது என்றாலும் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமே பாஜக எதிர்ப்புதான் என்று சொல்லப்படுகிறது. 2019 தேர்தலில் இருந்து திமுக கூட்டணி வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பாஜக எதிர்ப்புதான். அதனாலேயே பாஜக எதிர்ப்பை திமுக சமீப காலமாக கூர்மைப்படுத்தி பட்டை தீட்டி வருகிறது. மேலும், திமுகவுடன் விசிக, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளும் இணைந்ததால் கூட்டணி வலுவாக இருந்தது. நாங்கள் இடம் பெற்ற கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என காங்கிரஸ்காரர்கள் வாய்ப்பெருமைக்கு கூறிக் கொண்டாலும் கள நிலவரம் அப்படி இல்லை என்பதை தான் காட்டுகிறது.

சில சமயங்களில் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் கூட, அந்த வெற்றிக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது. இத்தனை ஆண்டுகளாக கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதமும் இருக்க இருக்க குறைந்து கொண்டே தான் வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக மீது அதிருப்தி என்றால், அதிமுகவுக்கு ஒட்டு விழும். அதிமுக மீது அதிருப்தி என்றால் திமுகவுக்கு ஓட்டு விழும். அதைத் தாண்டி காங்கிரஸ் இருந்தால்தான் வெற்றி, பாஜக இருந்தால் தான் வெற்றி என இரு தேசிய கட்சிகளும் பேசிக் கொள்வது போல அரசியல் சூழலும், தேர்தல் களத்தின் வரலாறும் நமக்கு உணர்த்துகிறது.

66
அழியாமல் இருக்கும் காங்கிரஸ்

அதாவது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் அளவுக்கு காங்கிரஸின் செல்வாக்கை கை கொடுக்கவில்லை என்ற சூழலில் எப்படி ஆட்சியில் பங்கு கொடுக்க முடியும்? என்பது திமுக தரப்பினரின் கேள்வியாக உள்ளது. ஆகையால் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என இவ்வளவு உரிமையாக போர்க்கொடி தூக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை உயர்த்தி வைத்திருக்கிறதா? வெற்றிகான முக்கிய காரணமாக இருந்திருக்கிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

தங்கள் பலத்தில்தான் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதாக காங்கிரஸ் கூறிக் கொண்டாலும், திராவிட கட்சிகளின் கூட்டணி தயவால்தான் இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அழியாமல் இருக்கிறது என்பது எதிர் தரப்பு வாதமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வந்தால் கூட்டணிக்கு வெற்றியென நெஞ்சை உயர்த்தி சொல்ல முதலில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் உழைக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர்களின் கருத்தாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories