Published : Oct 22, 2024, 01:59 PM ISTUpdated : Oct 22, 2024, 02:01 PM IST
கன்னியாகுமரி-ராமேஸ்வரம்-மதுரை நகரங்களில் உள்ள பிரசித்த பெற்ற கோயில்களுக்குச் செல்ல IRCTC சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை வழங்குகிறது. இந்தச் சுற்றுலா டிக்கெட் வெறும் 8,500 ரூபாய் முதல் கிடைக்கும்.
இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை நகரங்களுக்கு சிறப்புச் சுற்றுலா திட்டத்தை வழங்குகிறது. இந்த டூர் பேக்கேஜில், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
ரயில்வேயின் இந்தச் சுற்றுலா திட்டம் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை விடுமுறை தொகுப்பு (Kanyakumari Rameshwaram Madurai Holiday Package) என்று அழைக்கப்படுகிறது. 2 இரவுகள் உள்பட 3 நாட்கள் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு களிக்கலாம்.
25
IRCTC Kanyakumari Tour Package
இந்தியாவின் தெற்கு எல்லையாக உள்ள மிக முக்கியமான இடம் கன்னியாகுமரி. இது வங்காள விரிகுடா, அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களின் சந்திப்புப் புள்ளியாகும். இந்துக்களின் புனித யாத்திரை தலமாகவும் கருதப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காண்பது பரவசமான அனுபவமாக இருக்கும்.
கன்னியாகுமரி ஒரு காலத்தில் கிழக்கின் அலெக்ஸாண்டிரியா என்று குறிப்பிடப்பட்டது. கி.பி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இஸ்லாம் இப்பகுதி வழியாகவே இந்தியாவிற்கு வந்தது. கடல் வழியாக வந்த மிஷனரிகள் மூலம் கிறிஸ்துவம் பரவியதும் இங்கிருந்துதான். கிறிஸ்துவின் பன்னிரெண்டு தூதுவர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் கி.பி. 52 இந்த பகுதிக்கு வந்தார் என்று நம்பப்படுகிறது.
35
Madurai
'கிழக்கின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படும் மதுரை, தமிழ்நாட்டின் பழமையான நகரம் ஆகும். புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோயிலின் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலை அழகை ரசிக்ககலாம்.
45
Rameshwaram
இந்தச் சுற்றுலாத் திட்டத்தில், ராமேஸ்வரத்தையும் சுற்றிப் பார்க்கலாம். இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் ராமேஸ்வரத்தில் உள்ளது. "தெற்கின் பெனாரஸ்" என்றும் போற்றப்படுகிறது. காசி சென்றவர்கள் ராமேஸ்வரனுக்கும் சென்றால்தான் யாத்திரை முழுமையடையும் என்பது இந்துக்கள் மத்தியில் உள்ள பாரம்பரிய நம்பிக்கை.
55
Kanyakumari Rameshwaram Madurai Tour Package
இந்தத சுற்றுலா பேக்கேஜில் முன்பதிவு செய்ய தனிநபருக்கு ரூ.22930 கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு பேராகச் சென்றால், தலா ரூ.11600 டிக்கெட் கட்டணம் பெறப்படும். 3 பேர் சேர்ந்து செல்வதாக இருந்தால் இந்தக் கட்டணம் ரூ.8550 ஆகக் குறையும். 5-11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வர படுக்கை வசதியுடன் ரூ.4000, படுக்கை வசதி இல்லாமல் ரூ.2950 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.