diwali gift
தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு, அடுத்ததாக இனிப்புகள், அந்த வகையில் தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் 31ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அப்போது தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் புதுவிதமான பரிசுகள் வழங்க வேண்டும். ஆனால் எப்போதும் கடைகளில் கிடைக்கும் உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக புதிதாக என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்காகவே தமிழக அரசு சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் பரிசு பெட்டகத்தின் உள்ளே இருக்கும் பொருட்கள் தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் நலனை கெடுக்கும் பல ரசாயணங்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கு மத்தியில் தரமான மற்றும் உடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை வைத்து இனிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
diwali gift
மதி - தீபாவளி பரிசு பெட்டகம்
இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட பல்வேறு விற்பனை வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் சுய உதவிக் குழுக்களின் தரமான தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளியினை முன்னிட்டு தற்போது சுவையயும் தரமும் நிறைந்த பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்களைக் கொண்ட "மதி தீபாவளி பரிசுப் பெட்டகம்" (Mathi Diwali Gift Hampers) இணையதளம் மற்றும் கைபேசி எண் வாயிலாக மொத்தம் மற்றும் சிறிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
diwali gift box
நவதானியங்களை கொண்ட இனிப்புகள்
இந்தப் பரிசுப் பெட்டகத்தில், சிவப்பு அரிசி லட்டு, உலர்பழங்கள் லட்டு, கம்பு லட்டு, சோள லட்டு, ராகி லட்டு. கருப்புக் கவுனி லட்டு, கருப்பு உளுந்து லட்டு, நரிப்பயிர் லட்டு, தினை லட்டு, சாமை வட்டு மற்றும் ஆவாரம் பூ வட்டு ஆகிய லட்டு வகைகள். சாமை முறுக்கு. தேங்காய் பால் முறுக்கு. அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் 23.10.2024 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தீபாவளிப் பண்டிகைக்கு பரிசளிக்க ஏற்ற வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப்புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிட மற்றும் முன்பதிவு செய்திட "76038 99270" என்ற கைப்பேசி எண்ணை அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
diwali sweet
விலை எவ்வளவு தெரியுமா.?
மேலும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அழகிய பரிசு பெட்டியில் சிவப்பு அரிசி லட்டானது விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த வகையில் 100 கிராம் எடை கொண்ட லட்டானது 150 ரூபாய்க்கும், உலர் பழங்களை கொண்ட லட்டும் விற்பனைக்கு உள்ளது. 100 கிராம் உலர் லட்டானது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 320 கிராம் உடை கொண்ட உலர் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டு பெட்டகத்தின் விலை 350 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
diwali gift
கலை பொருட்கள் விற்பனை
இதே போல கம்பு சோளம் ஆகியவற்றின் மூலமாக செய்யப்பட்ட லட்டும் அரை கிலோ 450 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராகி லட்டும் நவதானியங்களை கொண்டு செய்யப்பட்ட லட்டின் விலையும் அரை கிலோ 450 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு கவுனி லட்டு, திணை லட்டு, கை முறுக்கு, பால் முறுக்கு அரிசி முறுக்கு போன்ற தீபாவளி பரிசு பெட்டகங்களும் தயாராக உள்ளது. மேலும் கலைப் பொருட்கள் கொண்ட தீபாவளி பரிசு பெட்டகமும் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது