ஐபிஎல் 2023 - சீசன் 16
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் - 2022
கடந்த முறை குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், இந்த முறை யார் வாகை சூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.
14 போட்டிகள்
இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மொத்தம் 14 ஆட்டங்கள் விளையாட வேண்டும். அதன் பின்னர் லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.
மெட்ரோ ரயில் நிலையங்கள்
இந்த நிலையில் சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடபழனி,சென்ட்ரல்,திருமங்கலம்,விம்கோ நகர்,நந்தனம் ரயில்நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.