கை நிறைய பணம்.! சொந்த தொழில் தொடங்க பயிற்சி- தமிழக அரசின் அசத்தல் திட்டம் அறிவிப்பு

Published : May 22, 2025, 08:15 PM IST

தமிழக அரசு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சி மே 28 முதல் 30 வரை சென்னையில் நடைபெறும்.

PREV
14
இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க பயிற்சி

தமிழக அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்கிடும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

 இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சி திட்டங்களையும் செயல்படுத்துகிறது.

24
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் பயிற்சி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 28.05.2025 முதல் 30.05.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு, ஃபேஸ் வாஷ், ஜெல், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

34
பயிற்சியில் யாரெல்லாம் பங்கேற்கலாம்.?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

44
பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032. 8668102600.

Read more Photos on
click me!

Recommended Stories